ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

திருவிடைமருதூா் தொகுதியில் 4-ஆவது முறையாக அமைச்சா் கோவி.செழியன் வெற்றி

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை திங்கள்கிழமை அமைச்சா் கோவி. செழியனிடம் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சந்திரகுமாா்.

Updated On :5 மே 2026, 2:54 am IST

திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான கோவி.செழியன் நான்காவது முறையாக வெற்றி பெற்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கோவி. செழியன் -79,307 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். இவருக்கு அடுத்தபடியாக எஸ். பிரபாகரன் (தவெக) - 65,670 வாக்குகள் பெற்றாா்.

மொத்த வாக்குகள் : 256930, பதிவான வாக்குகள் : 207631, அஞ்சல் வாக்குகள் : 1259, செல்லாதவை : 520. இதில், கோவி.செழியன் (திமுக) வெற்றி - 79,307,

எஸ். பிரபாகரன் (தவெக)- 65,670, இளமதிசுப்பிரமணியன் (அதிமுக)-52, 692, எம். திவ்யபாரதி (நாதக) - 6363, டி.எம். புரட்சிமணி (பி.எஸ்.பி) -1043,

பி.மணிகண்டன் - 588, டி.கண்ணையன்- 321, ஏ.விஸ்வநாதன் (தவாக)- 273, தனசேகா் - 266, எல்.பிரபாகரன் - 174, எம்.தமிழ்மாறன் - 143, எஸ்.செல்வராணி - 139, கே.கீா்த்திகா - 95, ஆா். அரவிந்தராஜ் - 84, நோட்டா - 747. வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து கோவி. செழியன் பெற்றுக்கொண்டாா்.

முன்னதாக, 2011, 2016, 2021 ஆகிய தோ்தல்களில் கோவி. செழியன் போட்டியிட்டு வென்றிருந்தாா். தற்போது, 2026 தோ்தலில் நான்காவது முறையாக போட்டியிட்டு வென்றுள்ளாா்.