செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

டைனோசர் தோலில் செய்யப்பட்ட கைப்பையா? விலைதான் அதிகம்!

டைனோசர் எச்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோல் மாதிரியால் செய்யப்பட்ட கைப்பை ஏலத்துக்கு வந்துள்ளது.

News image

டைனோசர் - பிரதிப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 4:28 pm IST

டைனோசர் எச்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோல் மாதிரியால் செய்யப்பட்ட கைப்பை ஏலத்துக்கு வந்துள்ளது.

சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே டைனோசர்கள் அழிந்துபோனதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், டைனோசர்கள் தொடர்பான அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில், அழிந்துபோன டி-ரெக்ஸ் இன டைனோசர்களின் எச்சங்கள் அமெரிக்காவில் கண்டறியப்பட்டு, அவற்றின் மூலம் ஆய்வகத்தில் கொலாஜன் மாதிரி உருவாக்கப்பட்டு, இறுதியாக அதிலிருந்து தோல் மாதிரியையும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதனை விஎம்எல் நிறுவனம், தி ஆர்கனாய்டு நிறுவனம் மற்றும் லேப் க்ரோன் லெதர் லிமிடெட் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, செயற்கையாக உருவாக்கப்பட்ட தோல் மாதிரிகளைக் கொண்டு, இப்போது ஒரு கைப்பையையும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நீலமும் பச்சையும் கலந்த நிறத்திலான இந்தப் பையில், ஸ்டெர்லிங் வெள்ளி மற்றும் கருப்பு வைரங்களாலான நுணுக்கமான வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

தற்போது, இந்தப் பையை ஆம்ஸ்டர்டாமின் ஆர்ட் விலங்கியல் அருங்காட்சியகத்தில், பார்வைக்காக வைத்துள்ளனர்.

தகவல்களின்படி, இதன் ஆரம்ப விலை 5 லட்சம் அமெரிக்க டாலர்களைத் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.6 கோடி) தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Handbag Made Of 'Dinosaur Leather' Is Selling For Rs 4.6 Crore At Auction

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.