இந்திய ஏ அணியில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழக வீரர்!

இந்திரஜித்துக்கு வாய்ப்பளிப்பதற்குப் பதிலாக யாஷ் துல்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஏ அணியில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழக வீரர்!

டிசம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அதற்கு முன்பு இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 நாள் இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 29 அன்றும் 2-வது டெஸ்ட் டிசம்பர் 6 அன்றும் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த இரு ஆட்டங்களிலும் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏ அணியில் புஜாரா, உமேஷ் யாதவ் விளையாடுகிறார்கள். கேரளத்தைச் சேர்ந்த ரோஹன் குண்ணுமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 24 வயது குண்ணுமல் இந்த வருடம் 9 முதல்தர இன்னிங்ஸில் 4 சதங்கள் அடித்துள்ளார். மேலும் இளம் வீரர்களான யாஷ் துல், யாஷவி ஜெயிஸ்வால் ஆகிய இருவரும் இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ளார்கள். 

இந்நிலையில் சமீபத்தில் முடிந்த ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் சதமடித்தார் தமிழக வீரர் பாபா இந்திரஜித்.  கூடுதலாக ஒரு அரை சதமும். 3 ஆட்டங்களில் 396 ரன்கள் எடுத்தார். சராசரி - 99.00. மேலும் துலீப் கோப்பை இறுதிச்சுற்றில் சதமடித்தார். 28 வயது இந்திரஜித்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. இந்நிலையில் பாபா இந்திரஜித் இந்திய ஏ அணிக்குத் தேர்வாகவில்லை. இந்திரஜித்துக்கு வாய்ப்பளிப்பதற்குப் பதிலாக யாஷ் துல்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com