இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி: மழையால் நிறுத்தி வைப்பு
By DIN | Published On : 27th November 2022 09:25 AM | Last Updated : 27th November 2022 09:27 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
நியூசிலாந்து - இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 4.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்தியா 22 ரன்கள் எடுத்துள்ளது. கில் 19 ரன்னும், தவான் 2 ரன்னும் அடித்துள்ளனர்.
இதையும் படிக்க: இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்
முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.