உலகக் கோப்பை: பிரான்ஸை வீழ்த்தியது துனிசியா!
By DIN | Published On : 30th November 2022 10:39 PM | Last Updated : 30th November 2022 10:39 PM | அ+அ அ- |

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக் கோப்பை போடியில் குரூப் டி பிரிவில் துனிசியா, பிரான்ஸ் அணிகள் மோதியது.
முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிரான்ஸ் அணி ஏற்கனவே 7 புள்ளிகள் பெற்று முன்னிலையில்தான் உள்ளது. இந்தப் போட்டியில் துனிசியா வென்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம்.
இரண்டாம் பாதியில் துனிசியாவை சேர்ந்த வஹ்பி கஸ்ரி 58வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இரண்டாம் பாதியின் முடிவில் பிரான்ஸ் அணி 90 நிமிடம் முடிந்து எக்ஸ்ட்ரா நேரம் ஒதுக்கப்பட்டதில் (90+8) 8வது நிமிடத்தில் கோல் அடுத்தது. பின்னர் அந்த கோல் விஏஆர் விதிமுறையின்படி இல்லையென அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் தோற்றாலும் 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் அணி.
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் துனிசியா ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது.