விதிமுறையை மீறிய மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி இங்கிலாந்து கேப்டன்

விதிமுறையை மீறிய மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விளக்கம் அளித்துள்ளார்.
விதிமுறையை மீறிய மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி இங்கிலாந்து கேப்டன்

விதிமுறையை மீறிய மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விளக்கம் அளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஆஸி. அணிக்கு எதிராக 3 டி20 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெர்த்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஆஸி. அணி வெற்றி பெற 23 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்டபோது மார்க் வுட் வீசிய ஷார்ட் பந்தை அடிக்க முயன்றார் ஆஸி. விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட். அப்போது பந்து பேட்டிலும் ஹெல்மெட்டிலும் பட்டு மேலே சென்றது. இதை கேட்ச் பிடிக்க முன்னே ஓடி வந்தார் வுட். அப்போது கிரீஸ் பக்கம் செல்ல முயன்ற மேத்யூ வேட், தன் அருகில் வந்த வுட்டைக் கைகளால் தடுத்தார். அவசரத்தில் அப்படிச் செய்தாரா அல்லது கேட்ச் பிடிக்க வந்த வுட்டை நிஜமாகவே தடுக்க நினைத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் செய்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்பது பார்த்த அனைவருக்கும் தெரிந்தது. எனினும் இதுகுறித்து முறையீடு செய்கிறீர்களா என இங்கிலாந்து கேப்டன் பட்லரிடம் நடுவர்கள் கேட்டபோது அவர் மறுத்து விட்டார். இதனால் தொடர்ந்து விளையாடினார் வேட். பிறகு 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. 200 ரன்கள் எடுத்த ஆஸி. அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தச் சம்பவம் பற்றி இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இப்படி நடந்திருந்தால் நான் முறையீடு செய்திருக்கலாம். இந்த ஆட்டத்தின்போது முறையீடு செய்கிறீர்களா என என்னைக் கேட்டார்கள். இல்லை எனக் கூறிவிட்டேன். இப்போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளேன். எனவே தொடர்ந்து விளையாடலாம் என நினைத்தேன். என்ன நடந்தது என்று நான் சரியாகப் பார்க்கவில்லை. எதற்காக முறையிட வேண்டும் எனத் தெரியவில்லை. நான் பந்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களிடம் சரியாகப் பார்த்தீர்களா எனக் கேட்டிருக்கலாம். ஆனால் முறையீடு செய்யாமல் தொடர்ந்து விளையாடவே எண்ணினேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com