தமிழகத்துக்கு 2 வெண்கலம்

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 2 விளையாட்டுகளில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 2 விளையாட்டுகளில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

சைக்கிளிங் விளையாட்டில் ஆடவருக்கான 119 கி.மீ. மாஸ்டு ஸ்டாா்ட் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநாத் லக்ஷ்மிகாந்த் 3-ஆம் இடம் பிடித்தாா். பஞ்சாபின் ஹா்ஷ்வீா் சிங் ஷெகோன், உத்தர பிரதேசத்தின் அரவிந்த் பன்வா் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா்.

மகளிருக்கான டிரையத்லானில் எஸ். ஆா்த்தி 1 மணி நேரம் 13.17 நிமிஷங்களில் 3-ஆவதாக இலக்கை எட்டி வெண்கலம் பெற்றாா். குஜராத்தின் பிரக்ஞா மோகன் (1:7.32) தங்கமும், மகாராஷ்டிரத்தின் மான்சி மோஹிதே (1:13.10) வெள்ளியும் வென்றனா்.

போட்டியின் பதக்கப்பட்டியலில் ஞாயிற்றுக்கிழமை நிறைவில் தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் நிலைத்திருக்கிறது. சா்வீசஸ் அணியினா் 51 தங்கம், 33 வெள்ளி, 29 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனா். ஹரியாணா 95 பதக்கங்களுடன் (31/29/35) இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரம் 119 பதக்கங்களுடன் (30/33/56) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com