புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான், வங்கதேச அணிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான், வங்கதேச அணிகளில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :15 அக்டோபர் 2022, 6:10 am

DIN

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான், வங்கதேச அணிகளில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அணிகளில் இருந்து சிறு மாற்றங்களை பாகிஸ்தான், வங்கதேச அணிகள் செய்துள்ளன.

பாகிஸ்தான் அணியில் லெக் ஸ்பின்னர் உஸ்மான் காதிருக்குப் பதிலாக ஃபகார் ஸமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உஸ்மான் காதிர், மாற்று வீரர்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடியபோது உஸ்மான் காதிருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

முத்தரப்பு டி20 போட்டியில் விளையாடியதை முன்வைத்து வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நடுவரிசை பேட்டர் செளம்யா சர்கார், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷொரிஃபுல் இஸ்லாம் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்பு 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்ட சபிர் ரஹ்மான், முகமது சைஃபுதின் ஆகிய இருவரும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.