அயர்லாந்தை எளிதாக வீழ்த்தி 2-ம் இடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.
அயர்லாந்தை எளிதாக வீழ்த்தி 2-ம் இடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர் 3 ரன்களிலும் மேக்ஸ்வெல் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் ஃபிஞ்ச் 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். மிட்செல் மார்ஷ் 28, ஸ்டாய்னிஸ் 35 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்ததால் நல்ல ஸ்கோர் கிடைத்தது. அயர்லாந்து வீரர் மார்க் அடைர் இரு ஓவர்களில் 26, 17 என ரன்களை வாரி வழங்கியது நெதர்லாந்துக்குப் பின்னடைவாக அமைந்தது. 

இதன்பிறகு பேட்டிங் செய்த அயர்லாந்து அணியில் லார்கன் டக்கரைத் தவிர மற்ற பேட்டர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து திரும்பினார்கள். லார்கன் டக்கர் 48 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அயர்லாந்து அணி, 18.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டங்களில் 5 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் அயர்லாந்து அணி 4 ஆட்டங்களில் 3 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com