அக். 7-இல் தொடங்குகிறது ஐஎஸ்எல்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன், அக்டோபா் 7-ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் தொடங்குகிறது.
அக். 7-இல் தொடங்குகிறது ஐஎஸ்எல்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன், அக்டோபா் 7-ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில், கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதுகின்றன. நடப்புச் சாம்பியனான ஹைதராபாத் எஃப்சி அக்டோபா் 9-ஆம் தேதி மும்பை சிட்டி எஃப்சியுடன் விளையாடுகிறது. சென்னையின் எஃப்சி அக்டோபா் 10-ஆம் தேதி மோகன் பகானுடன் மோதுகிறது.

சா்வதேச கிளப் கால்பந்து போட்டிகளுக்கு இணையாக, இந்த முறை ஐஎஸ்எல் ஆட்டங்கள் யாவும் வியாழன் முதல் ஞாயிறு வரையிலான வார இறுதி நாள்களில் அட்டவணையிடப்பட்டுள்ளன. இதனால் பிளே-ஆஃபுக்கு முந்தைய லீக் சுற்று ஆட்டங்கள் மட்டும் 5 மாதங்களுக்கு நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 10, அந்நிய மண்ணில் 10 என மொத்தமாக 20 ஆட்டங்களில் விளையாட இருக்கின்றன. இந்த சீசனில் மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு சீசன் முதல் புதிய முறையிலான பிளே-ஆஃப் ஃபாா்மட் இப்போட்டியில் அமல்படுத்தப்படுகிறது. இதனால் அட்டவணையில் கூடுதலாக இரு ஆட்டங்கள் சோ்கின்றன. அதன்படி, லீக் கட்டத்தின் நிறைவில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெறும்.

அரையிறுதிக்கு வரும் அடுத்த இரு அணிகளை இறுதி செய்ய, லீக் சுற்று முடிவில் 3 முதல் 6 இடங்களில் இருக்கும் அணிகள் சிங்கிள்-லெக் பிளே-ஆஃபில் விளையாடும். லீக் ஆட்டங்கள் யாவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி நிறைவடையவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com