கோலி மீண்டும் அரைசதம்: பாகிஸ்தானுக்கு 182 ரன்கள் இலக்கு

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 181 ரன்கள் குவித்துள்ளது.
கோலி மீண்டும் அரைசதம்: பாகிஸ்தானுக்கு 182 ரன்கள் இலக்கு

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 181 ரன்கள் குவித்துள்ளது.

ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. முதல் 5 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா மற்றும்  கே.எல்.ராகுல் தலா 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை விரட்டினார். அதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 9க்கு கீழ் குறையாமல் சென்றது. இருப்பினும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பந்த். ஆனால், அவர் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. அவர் 14 ரன்களில்  ஷதாப் கான் சுழலில் தவறான ஷாட்டினை விளையாடினை ஆட்டமிழந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த ஹர்திக் பாண்டியா இன்றைய ஆட்டத்தில் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் இந்திய அணிக்கு இக்கட்டான சூழல் உருவானது. இந்திய அணி 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

விராட் கோலி ஒரு முனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் தீபக் ஹூடா அவருக்கு உறுதுணையாக விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அவர் எதிர்கொண்ட 36வது பந்தில் சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்து அசத்தினார். தீபக் ஹூடா 16 ரன்களில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. 

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com