யு.எஸ். ஓபன்: நடப்பு சாம்பியன் தோல்வி
By DIN | Published On : 05th September 2022 04:35 PM | Last Updated : 05th September 2022 04:37 PM | அ+அ அ- |

நிக் கிர்கியோஸ்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மெத்வதேவ் 4-வது சுற்றில் தோல்வியடைந்தார்.
யு.எஸ். ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானு முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் நடப்பு சாம்பியனான மெத்வதேவ் தற்போது தோல்வியடைந்துள்ளார்.
4-வது சுற்றில் நடப்பு சாம்பியன் மெத்வதேவும் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸும் மோதினார்கள். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் 7-6 (11), 3-6, 6-3, 6-2 என வென்று காலிறுதிக்குத் தகுதியடைந்தார் 27 வயது கிர்கியோஸ். இதன்மூலம் முதல்முறையாக யு.எஸ். ஓபன் போட்டியில் காலிறுதிக்கு நுழைந்துள்ளார். விம்பிள்டன் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார்.
நடப்பு சாம்பியான ரஷியாவைச் சேர்ந்த 26 வயது மெத்வதேவ், உடல்நலக் குறைவு காரணமாகத் தனது ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகப் பேட்டியளித்தார்.