கோலியின் அடுத்த சதம் எப்போது?: பிரபல ஜோதிடரின் கணிப்பு

அதுதான் உங்களுடைய தலைமைப்பண்பிலிருந்து நான் கற்றுக்கொள்ளும் பாடம்.
கோலியின் அடுத்த சதம் எப்போது?: பிரபல ஜோதிடரின் கணிப்பு

ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். 3 ஆட்டங்களில் 154 ரன்கள் எடுத்துள்ளார். 2 அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 126.22.

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கோலி சதமடிக்கவில்லை. 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 27-வது டெஸ்ட் சதம். அடுத்தச் சதம் எப்போது என்று நீண்ட நாளாகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் விளையாடிய ஆறு இன்னிங்ஸில் ( ஒரு டெஸ்ட், தலா 2 ஒருநாள், டி20) மொத்தமாக 76 ரன்கள் மட்டுமே எடுத்தார். சிறிது கால ஓய்வுக்குப் பிறகு விளையாடுவதால் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் கோலி எவ்வளவு ரன்கள் எடுக்கப் போகிறார் என்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆசியக் கோப்பைப் போட்டியில் இதுவரை நன்றாகவே விளையாடி வந்தாலும் அவருடைய அடுத்த சதத்தை எப்போது காணப் போகிறோம் என்பதே ரசிகர்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் விராட் கோலி அடுத்த சதத்தை அதாவது 71-வது சதத்தை எடுப்பார்  எனப் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:

இந்த ஆண்டு புத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அன்று ராஜ் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஜோதிட நிகழ்ச்சியில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார், இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளில் அடுத்த சதத்தை நிறைவு செய்வார் என்று சொல்லி இருந்தோம். இன்று விராட் கோலி அவர்கள் அரை சதம் அடித்ததுடன் ஏசியா தொடரில் இதுவரை அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையும் தக்க வைத்துள்ளார் என்று கூறியுள்ளார். 

2022-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களும் டெஸ்டில் இரு சதங்களும் விராட் கோலி அடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று ஆண்டுத் தொடக்கத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.

ஆசியக் கோப்பைப் போட்டிக்கு அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதன்பிறகு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. நவம்பர் மத்தியில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. 

பாலாஜி ஹாசன் சொல்கிற டிசம்பர் மாதம் இந்திய அணி, வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்பிறகு அதே மாதத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் இந்த இரு சுற்றுப்பயணங்களில் ஏதோவொன்றில் விராட் கோலி சதமடிப்பார் என எதிர்பார்க்கலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com