இந்தியா தொடர்: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
By DIN | Published On : 06th September 2022 05:23 PM | Last Updated : 06th September 2022 05:23 PM | அ+அ அ- |

தெ.ஆ. அணி
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
டி20 தொடர் செப்டம்பர் 28-ல் ஆரம்பித்து அக்டோபர் 4-ல் முடிவடையவுள்ளது. ஒருநாள் தொடர் அக்டோபர் 6-ல் ஆரம்பித்து அக்டோபர் 11-ல் முடிவடையவுள்ளது. இதற்குப் பிறகு இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளன.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பவுமா தலைமையிலான அணியில் காயம் காரணமாகப் பிரபல வீரர் வான் டர் டுசென் இடம்பெறவில்லை. இதே அணி, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்தியாவில் பங்கேற்கவுள்ள ஒருநாள் தொடருக்கான தெ.ஆ. அணியும் இன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெ.ஆ. ஒருநாள் அணி
பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், கிளாசென், கேஷவ் மஹாராஜ், மலான், மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, நோர்கியா, பார்னெல், பெக்லுக்வாயோ, டுவென் பிரிடோரியஸ், ரபாடா, ஷம்சி.