சுரேஷ் ரெய்னா ஓய்வு அறிவிப்பு
By DIN | Published On : 06th September 2022 12:56 PM | Last Updated : 06th September 2022 12:56 PM | அ+அ அ- |

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.
2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதே நாளில் ரெய்னாவும் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
35 வயது ரெய்னா, 2005 முதல் 2018 வரை இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 205 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலான ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவை.
இந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் மற்றும் இந்திய உள்ளூர் போட்டிகளில் அவர் இனி விளையாட மாட்டார். எனினும் இதற்குப் பிறகு வெளிநாட்டு லீக் போட்டிகள், சாலைப் பாதுகாப்பு போட்டி போன்ற டி20 லீக் போட்டிகளில் அவரால் சுதந்திரமாகப் பங்கேற்க முடியும்.