உலகின் சிறந்த 5 டி20 வீரர்கள்: ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணங்கள்!
By DIN | Published On : 06th September 2022 12:17 PM | Last Updated : 06th September 2022 12:17 PM | அ+அ அ- |

உலகின் சிறந்த ஐந்து டி20 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்.
அந்த ஐந்து பேரில் இரு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
பாபர் ஆஸம், ஜாஸ் பட்லர், பாண்டியா, ரஷித் கான், பும்ரா என இந்த ஐந்து பேரையும் உலகின் சிறந்த டி20 வீரர்களாகக் குறிப்பிட்டுள்ளார் பாண்டிங். இவர்களைப் பற்றிய பாண்டிங்கின் கருத்துகள்.
பாபர் ஆஸம்: டி20 கிரிக்கெட்டின் நெ.1 பேட்டர். அவருடைய சாதனைகளே அவருடைய திறமையைச் சொல்லும்.
ரஷித் கான். இவரே நெ.1 டி20 வீரர். ஐபிஎல் ஏலத்தில் ஏலத்தொகைக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்தால், ரஷித் கான் தான் அதிகத் தொகைக்குத் தேர்வாக வாய்ப்புண்டு. டி20 கிரிக்கெட்டில் அவருடைய எகானமி அற்புதம். அவர் இடம்பெற்றுள்ள அணிக்கு எதிராக நீங்கள் விளையாடினால் உங்களால் அதற்கு முந்தைய இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது.
பட்லர்: பட்லருக்குப் பயிற்சியளிக்கும்போதுதான் மற்ற வீரர்களிடம் இல்லாத திறமை இவரிடம் உள்ளது என்பதை அறிவீர்கள். குறுகிய காலத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார். கடந்த ஒரு வருடத்தில் அவருடைய ஆட்டத்திறன் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுள்ளது.
பாண்டியா: ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவருடைய பந்துவீச்சில் எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால் பழையபடி பந்துவீசிக் கொண்டிருக்கிறார். பேட்டிங்கில் பக்குவம் அடைந்துள்ளார். ஆட்டத்தின் சூழலை நன்குப் புரிந்துகொள்கிறார். டி20 கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார்.
பும்ரா: டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டின் முழுமையான பந்துவீச்சாளர். புதிய பந்தில் நன்குப் பந்துவீசுவார். கடைசி ஓவர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.