டிகேவுக்குப் பதிலாக ரிஷப் பந்தைத் தேர்வு செய்தது ஏன்?: ரோஹித் சர்மா விளக்கம்

தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷப் பந்தைத் தேர்வு செய்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்...
டிகேவுக்குப் பதிலாக ரிஷப் பந்தைத் தேர்வு செய்தது ஏன்?: ரோஹித் சர்மா விளக்கம்

தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷப் பந்தைத் தேர்வு செய்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 72 ரன்கள் எடுத்தார். மதுஷங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த இலங்கை அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 52 ரன்களும் குசால் மெண்டிஸ் 57 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார்கள். சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 விக்கெட்டுகளும் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் எடுத்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இந்நிலையில் இந்திய அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் விளையாடுவதற்குப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். இதுபற்றி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

நடு ஓவர்களில் ஒரு இடக்கை பேட்டர் விளையாட வேண்டும் என எண்ணினோம். அதனால் தான் தினேஷ் கார்த்திக் வெளியேற்றப்பட்டார். மற்றபடி தினேஷ் கார்த்திக் சரியாக விளையாடவில்லை போன்ற காரணம் எதுவும் இதற்கு இல்லை. அழுத்தத்தை விடுவிக்க இடக்கை பேட்டர் நடு ஓவர்களில் விளையாடினால் சரியாக இருக்கும் என எண்ணினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்கள் அணியில் நெகிழ்தன்மை இருக்க வேண்டும் என விரும்புகிறோம். எதிரணிக்கு ஏற்றாற்போல அணியில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். நான்கு, ஐந்து பேட்டர்கள் எப்போதும் விளையாடுவார்கள். பேட்டிங்கில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com