அமெரிக்க ஓபன்: அல்காரஸ் சாம்பியன்
By DIN | Published On : 12th September 2022 07:54 AM | Last Updated : 12th September 2022 08:07 AM | அ+அ அ- |

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஆடவர் சாம்பியன் பட்டத்தை அல்காரஸ் கைப்பற்றினார்.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த காஸ்பர் ரூடை, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 19 வயதான இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூடை அல்காரஸ் வீழ்த்தினார். இது அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
இதையும் படிக்க- ஆசிய சாம்பியன் இலங்கை
இதன்மூலம் அல்காரஸ் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்நது சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மிகக் குறைந்த வயதில் முதலிடம் பிடித்த வீரர் என்ற பெருமையை அல்காரஸ் பெற்றுள்ளார்.