ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்: ஆப்கானிஸ்தான் வீரருக்கு முதலிடம்!
By DIN | Published On : 12th September 2022 03:49 PM | Last Updated : 12th September 2022 03:49 PM | அ+அ அ- |

ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 12 சிக்ஸர்கள் அடித்தார். இந்தியாவின் கோலி 11 சிக்ஸர்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஸத்ரான், இந்தப் போட்டியில் 72 ரன்கள் எடுத்தார். அதிலேயே 8 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.
2022 ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள்
1. குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) - 12
2. கோலி (இந்தியா) - 11
3. குசால் மெண்டிஸ் (இலங்கை) - 9
4. ராஜபக்ச (இலங்கை) - 9
5. ரோஹித் சர்மா (இந்தியா) - 8
6. நஜிபுல்லா ஸத்ரான் (ஆப்கானிஸ்தான்) - 8
7. சூர்யகுமார் யாதவ் - 8