தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஷிகர் தவான் கேப்டனா?
By DIN | Published On : 12th September 2022 03:40 PM | Last Updated : 12th September 2022 03:40 PM | அ+அ அ- |

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி டி20 உலக கோப்பை அக்டோபர் 16 முதல் நவம்பர் 13வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிறது. டி20 உலக கோப்பை வீரர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக இந்த தொடரில் ஷிகர் தவன் கேப்டனாக செயல்ப்டுவாரென பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் விவிஎஸ் லக்ஷ்மணன் பயிற்சியாளராக செயல்படுவாரென தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் தென்னாப்பிரிவுக்காவுடன் தனது சொந்த மண்ணில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் விளையாட உள்ளது.
முதல் டி20 போட்டி- செப்.23 (திருவனந்தபுரம்)
2வது டி20 -செப்.28 (குவஹாட்டி)
3வது டி20 - அக்.4 (இந்தோர்)
அக்.6 , அக் 9, அக். 11 தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இதில்தான் ஷிகர் தவான் தலைமையேற்று நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.