தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பந்த் சிறப்பானவர்: கம்பீர் கூறும் காரணங்கள் என்ன?

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்தது குறித்து விமரசனத்தை கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கம்பீர். 
தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பந்த் சிறப்பானவர்: கம்பீர் கூறும் காரணங்கள் என்ன?

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்தது குறித்து விமரசனத்தை கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கம்பீர். 

ஆசியக் கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் யார் விளையாடுவதென கிரிக்கெட் விம்ரசகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதத்தினை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கூறியதாவது: 

தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவருமே அணியில் இடம் பிடிக்க முடியாது. ஏனெனில் 6வது பவுலருக்கான இடமில்லாமல் போகும். இல்லையெனில் ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்ற யாரையாவது இழக்க நேரிடும். ரிஷப் பந்தை ஓப்பனிங் ஆட வைக்கலாம். இல்லையெனில் இருவருமே மிடிலில் ஆட சரியாக இருக்காது. 10-12 பந்துகள் ஆடும் வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும். அவரால் அணியை எப்படி வெற்றி நோக்கி எடுத்து செல்ல முடியும்? அதற்கு உத்திரவாதம் கிடையாது. தினேஷ் கார்த்திக்கும் டாப் 5இல் விளையாடும் ஆசை இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் ரிஷப் பந்த்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஆட வைக்கலாம். என்னுடைய தேர்வில் ரிஷப் நிச்சயமாக இருப்பார். அவர் 5வது இடத்திலும், ஹர்திக் 6வது இடத்திலும், அக்‌ஷர் 7வது இடத்திலும் சரியாக இருக்கும். வேண்டுமானால் அஸ்வின் 8வது இடத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com