விமர்சனங்களைக் கண்டுகொள்வதில்லை: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன்.
விமர்சனங்களைக் கண்டுகொள்வதில்லை: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்

டி20 கிரிக்கெட்டில் விரைவாக ரன்கள் எடுக்காதது குறித்த விமர்சனங்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் பதில் அளித்துள்ளார்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 7 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கேப்டனும் தொடக்க வீரருமான பாபர் ஆஸம் விரைவாக ரன்கள் எடுப்பதில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆசியக் கோப்பைப் போட்டியில் 6 இன்னிங்ஸில் 68 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் தன்னுடைய பேட்டிங் குறித்த விமர்சனங்களுக்கு பாபர் ஆஸம் பதில் அளித்துள்ளதாவது:

எல்லோரும் அவரவர் கருத்துகளைக் கூறலாம். நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். மக்களுக்குக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் அதைக் கேட்பதில்லை. என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. முன்னாள் வீரர்கள் கருத்துகளைக் கூறும்போது தனிமனிதத் தாக்குதல்களை வெளிப்படுத்துகிறார்கள். எங்கள் மீதான அழுத்தங்கள், பொறுப்புகளை அவர்கள் நன்கு அறிவார்கள். எங்களைப் பற்றிய கருத்துகளை நான் கண்டுகொள்வதில்லை. அதனால் எந்த வித்தியாசமும் இல்லை. இதற்கு முன்பு நான் நன்றாக விளையாடியுள்ளேன். இனியும் நன்றாக விளையாடுவேன். என் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என்ன செய்தாலும் மக்கள் பேசுவார்கள். அவற்றை நிராகரிப்பது தான் நல்லது என்றார். a

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com