மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு: அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு
கேகேஆருக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
2023ஆம் ஆண்டின் ஐபில் போட்டியில் 22வது போட்டியாக புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள கேகேஆர் அணியும் 9வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளது.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக விளையாடுகிறார். ரோஹித் சர்மா மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். மிகவும் எதிர்பார்த்த சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தப் போட்டியில் மகளிர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸியை ஆடவர் அணி அணிந்து விளையாட உள்ளது. மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 19000க்கும் மேற்பட்ட பெண்கள், 200 குழந்தைகள் இந்தப் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...