மும்பையின் தோல்விக்கு இதுதான் காரணம்: மார்க் பௌச்சர்

கடைசி 5 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடைசி 5 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 22) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்துவீச்சினால் பஞ்சாப் கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

தோல்வி குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியதாவது: ஆட்டம் சீராக இருந்தது. சூர்யகுமார் யாதவின் விக்கெட் மிகப் பெரியது. அவர் அடித்த ஷாட் கொஞ்சம் அதிக உயரம் சென்றிருந்தால் அது பவுண்டரியாக சென்றிருக்கும். ஆனால், அந்தப் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் சிறப்பாக விளையாடினார். நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். பஞ்சாப் கிங்ஸ் அணியும் சிறப்பாக பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்தார்கள். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தாலும் அவர்கள் அதிக ரன்கள் அடித்தது எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. நாங்கள் ஆட்டத்தின் பாதி வரை ஆட்டத்தினை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் நாங்கள் அதிக ரன்களைக் கொடுத்துவிட்டோம். கடைசி 5 ஓவர்களில் 96 ரன்கள் கொடுத்துவிட்டோம். இந்த தோல்வி எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆட்டத்தில் நாங்களே ஆதிக்கம் செலுத்தினோம். இறுதியில், தோல்வியடைந்தது ஏமாற்றமாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com