பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இரண்டு தோல்விகளை வைத்து இந்தியாவை குறைத்து மதிப்பிடாதீர்கள்: பிரபல முன்னாள் இந்திய வீரர்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு தோல்விகளை வைத்து இந்திய அணியின் பலத்தை தவறாக மதிப்பிடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2023, 4:16 pm

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு தோல்விகளை வைத்து இந்திய அணியின் பலத்தை தவறாக மதிப்பிடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுடன் தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் தொடர்ச்சியான இரு தோல்விகளால் இந்திய அணி விளையாடுவது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு தோல்விகளை வைத்து இந்திய அணியின் பலத்தை தவறாக மதிப்பிடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அதனால் இந்தியாவின் தோல்வி குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. இந்திய அணியின் இரண்டு தோல்விகளுக்குப் பிறகு எழும் எதிர்மறை விமர்சனங்களை பார்க்க முடிகிறது. ஆனால்,  இந்திய அணி வலுவாக உள்ளது என்றே நான் கூறுவேன். அதனால், இந்த இரு தோல்விகளை வைத்து நான் இந்திய அணியின் பலத்தை மதிப்பிட மாட்டேன். தோல்விக்கு காரணம் முக்கியமான வீரர்கள் அணியில் இல்லாததே ஆகும். பும்ரா இல்லாதது அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு. அவர் அணியில் மீண்டும் இணைவது அணியின் பலத்தை அதிகரிக்கும். பும்ரா முழுத் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.