உலகக் கோப்பையில் வங்கதேசத்தை வழிநடத்தும் ஷகிப்!

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஷகீப் அல் ஹசன் வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பையில் வங்கதேசத்தை வழிநடத்தும் ஷகிப்!

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஷகிப் அல் ஹசன் வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியக்  கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரை தவிர்த்து நியூசிலாந்துக்கு எதிராக வருகிற செப்டம்பரில் ஒருநாள் தொடரில் வங்கதேசம் விளையாடவுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறவுள்ளது. 

வங்கதேச அணியை தமிம் இக்பால் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி வந்தார். அவர் அண்மையில் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். இந்த நிலையில், வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது: நாங்கள் ஷகிப் அல் ஹசனை ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நியமித்துள்ளோம். ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி நாளை அறிவிக்கப்படும். அணித் தேர்வுக் குழுவினர் 17 பேர் கொண்ட வங்கதேச அணியை தேர்ந்தெடுக்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷகிப் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தற்போது வங்கதேச அணியை மூன்று வடிவிலான போட்டிகளிலும் அவர் வழிநடத்த உள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஷகிப் வங்கதேச அணியின் டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணிக்காக இதுவரை 52 ஒருநாள், 19 டெஸ்ட் மற்றும் 39 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com