ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்து இந்திய அணி யோசித்திருக்கும்: ஆர்.பி.சிங்

ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்து இந்திய அணி யோசித்திருக்கும்: ஆர்.பி.சிங்

இந்திய அணி ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்து அக்கறை கொண்டிருக்கக் கூடும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்து அக்கறை கொண்டிருக்கக் கூடும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது போட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது. நடந்த முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் தடுமாறி வந்த நிலையில், கடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இருப்பினும், தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில்லினால் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை. 

இந்த நிலையில், இந்திய அணி ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்து அக்கறை கொண்டிருக்கக் கூடும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்து அணி நிர்வாகம் ஏற்கனவே யோசித்திருக்கும் என்பதாகவே நான் உணர்கிறேன். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இதுவரை ஷுப்மன் கில் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை. சில நேரங்களில் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை விளையாட கில் தடுமாறுகிறார். ஆடுகளங்களின் தன்மை சவால் அளிப்பதாகவே இருக்கக் கூடும். நீங்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போது அனைத்து விதமான ஆடுகளங்களிலும் விளையாட உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய ஆடுகளங்களின் தன்மை போன்று பெரிய ஷாட் அடிப்பதற்கு ஏற்றாற்போல் அனைத்து ஆடுகளங்களின் தன்மையும் இருக்காது. ஆனால், இந்திய அணி ரோஹித் சர்மாவுடன், ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக எதிர்காலங்களில் களமிறக்க முடிவு செய்திருப்பதாக நான் உணர்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com