10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நியூசிலாந்து அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் முறையே செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர், உலகக் கோப்பைக்கு முன்னதாக தங்களை தயார்படுத்திக் கொள்ள அந்த அணிகளுக்கு உதவும்.
இதையும் படிக்க: பிரபாஸுடன் இணையும் துல்கர் சல்மான்?
நியூசிலாந்து அணி உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது. அதேபோல வங்கதேசம் அக்டோபர் 7 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர் வருகிற செப்டம்பர் 21 முதல் தொடங்கவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளும் வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் உலகக் கோப்பை நிறைவடைந்த பிறகு நடத்தப்படவுள்ளது. டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஜெயிலர் பார்த்தபின் ரஜினி இதைத்தான் சொன்னார்..: நெல்சன்
முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 21, இரண்டாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 23 மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28 தொடங்கி டிசம்பர் 2 வரை நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் டிசம்பர் 6 தொடங்கி டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது.
நியூசிலாந்து கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெகவால் தொகுதிகள் மாறும் அமைச்சர்கள்: நிர்மல் குமார்

வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக எதிரணிகளிடம் திட்டங்கள் இருக்கும்: இர்பான் பதான்

சிம்லாவில் ராகுல் காந்தி!
துரந்தர் 2! குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சூழலை உருவாக்க முயற்சி: காங்கிரஸ்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

