நான் செய்தது குறித்து எந்தக் கவலையுமில்லை: ரன் அவுட் சர்ச்சை குறித்து ஹர்மன்ப்ரீத்!  

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் வங்கதேச அணிக்கு எதிரான சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்திய மகளிர் அணி வங்கதேசம் உடனான போட்டியின் போது இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானது. நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்க அதிர்ச்சியான ஹர்மன்ப்ரீத் கௌர் ஸ்டம்பினை பேட்டால் அடித்தும் நடுவரிடம் பேட்டால் பட்டதெனவும் வாதிட்டும் சென்றார். பின்னர் போட்டி  முடிந்தப் பிறகு நடுவர்கள் தீர்ப்பு குறித்து தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்தார். 

ஹர்மன்ப்ரீத் கௌர் செயலுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளன. இந்த விடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் ஹர்மன்ப்ரீத்திற்கு போட்டித் தொகையில் இருந்து 25 சதவிகிதம் அபராதமாகவும் இரண்டு போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது. 

இதுகுறித்து ஹர்மன்ப்ரீத் தற்போது, “நான் செய்தது குறித்து எந்த கவலையுமில்லை. விளையாட்டு வீரர்/விராங்கனையாக நமக்கு இறுதியில் எல்லாம் சரியாக நடக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்போம். ஒரு வீராங்கனையாக நாம் நினைத்ததை செய்ய வேண்டும். நான் எந்த ஒரு வீராங்கனையும் நபரையும் குறித்து தவறாக பேசவில்லை. மைதானத்தில் என்ன நடந்ததோ அதைத்தான் கூறினேன். எது குறித்தும் நான் கவலைப்படவில்லை” எனக் கூறினார். 

இந்தத் தடையால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் சில போட்டிகளில் ஹர்மன்ப்ரீத் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com