ரோஹித் தலைமைக்கு நான் ரசிகன்: முன்னாள் இங்கிலாந்து கேப்டன் புகழாரம்!

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ரோஹித் சர்மா தலைமை  குறித்து பாராட்டி பேசியுள்ளார். 
ரோஹித் தலைமைக்கு நான் ரசிகன்: முன்னாள் இங்கிலாந்து கேப்டன் புகழாரம்!

36 வயதாகும் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பிப்ரவரி 2022 முதல் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். அதனை தொடர்ந்து ஒருநாள் அணி, டி20 அணி என அனைத்திற்கும் ரோஹித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் சர்மா தன்னை நிலை நிறுத்தியதன் விளைவாக இந்திய அணிக்கும் தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஆசியக் கோப்பை போட்டிகள் ஆக.30ஆம் நாள் தொடங்கி செப்.17ஆம் நாள் முடிவடைய உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் நாள் தொடங்கி நவ.19ஆம் நாள் முடிவடைய உள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்பதால் இந்திய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 

கடைசியாக இந்திய அணி, எம்எஸ் தோனி தலைமையில் 2011இல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த முறை இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பையை வென்ற கேப்டனுமாகிய இயான் மோர்கன், “நான் ரோஹித்தின் தலைமைக்கு ரசிகன். அணியை தன்னுடன் எடுத்து செல்லும் திறமை பெற்றவர். இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுமென நம்புகிறேன். 

அணியில் எத்தனை பேர் இருந்தாலும் ரோஹித்தின் பேச்சுக்கு மரியாதை இருக்கும். ரோஹித் கேப்டனாக இல்லாவிட்டாலும் அவரால் அணியில் மாற்றதை உண்டாக்க முடியும்” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com