வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

3வது ஒருநாள்: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கினை தேர்வு செய்துள்ளது. 

News image
படம்: ட்விட்டர் | பாகிஸ்தான் கிரிக்கெட்
Updated On :26 ஆகஸ்ட் 2023, 10:32 am

DIN

பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியினை இலங்கையில் விளையாடி வருகிறது. ஆசியக் கோப்பை வரும் ஆக.30 ஆம் நாள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டி பாகிஸ்தான் நேபாளம் அணிகள் மோதுகின்றன. 

முதல் ஒருநாள் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தா வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 302 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. ஷதாப் கான் சிறப்பாக விளையாடினார். பந்து வீச்சாளர் நசீம் ஷா கடைசி ஓவரில் தனது அபாரமான பேட்டிங்கின் மூலமாக வெற்றியை பாகிஸ்தான் அணிக்கு உரித்தாகினார். 

இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கினை தேர்வு செய்துள்ளது. 13 ஓவர் முடிவில் பாக். 52/2 ரன்கள் எடுத்துள்ளது. 

பாபர் ஆஸம் -10*, ரிஸ்வான் - 0* .  இமாம் உல் ஹக் 13 ரன்களுக்கும் ஃப்கர் ஜமான் 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என  பாகிஸ்தான் அணி  முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.