நியூசிலாந்து டி20 தொடர்: ஜோஷ் டங் விலகல்; அணியில் சேர்க்கப்பட்ட பிரபல ஆல்ரவுண்டர்!

இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். 
நியூசிலாந்து டி20 தொடர்: ஜோஷ் டங் விலகல்; அணியில் சேர்க்கப்பட்ட பிரபல ஆல்ரவுண்டர்!

இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். 

நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

இந்த நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள ஜோஷ் டங்குக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ள ஜோஷ் டங்குக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

34 வயதாகும்  கிறிஸ் ஜோர்டன் இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இங்கிலாந்து அணிக்காக 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் ஜோர்டன் 96 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com