விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு இவர் சரியான தேர்வாக இருப்பார்: முன்னாள் இந்திய வீரர்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயன்படுத்துவது சிறந்த முடிவாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு இவர் சரியான  தேர்வாக இருப்பார்: முன்னாள் இந்திய வீரர்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயன்படுத்துவது சிறந்த முடிவாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் தொடர் என்பதால் ஆசியக் கோப்பை தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயன்படுத்துவது சிறந்த முடிவாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் மிக முக்கிய பங்காற்ற உள்ளார். இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மிகவும் முக்கியம். இந்திய அணியில் முதல் 5 இடங்களில் களமிறங்கும்  வீரர்கள் பந்து வீசப் போவதில்லை. ஒரு வேளை இந்திய அணிக்கு 6 பேர் பந்துவீசும் விதத்தில் அணி தேவைப்பட்டால் முதல் 5 இடங்களில் உள்ளவர்களில் யாரேனும் பந்துவீச்சாளராக இருக்க வேண்டும் அல்லது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும். கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடும் பட்சத்தில் அணியின் சமநிலை சரியாக இருக்கும் என நான் உணர்கிறேன்.

ஒருவேளை கே.எல்.ராகுல் சரியாக பேட் செய்யவில்லை என்றால் இஷான் கிஷன் உள்ளார். அவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயன்படுத்தலாம். 50 ஓவர் கிரிக்கெட்டைப் பொருத்தவரையில் இந்திய அணிக்கு முழு உடல் தகுதியுடன் உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கண்டிப்பாக தேவை. அதனால், இந்திய அணி சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டும். போதிய உடல்தகுதி இல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேர்வு செய்யப்பட்டால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com