பந்துவீச்சாளர்களின் தயார் நிலையை ஆசியக் கோப்பை தொடர் பரிசோதிக்கும்: வாசிம் அக்ரம்

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசியக் கோப்பை நடைபெறுவதால் அதில் பங்கு பெறும் அணிகளின் பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பைக்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் விதமாக அமையும்.
பந்துவீச்சாளர்களின் தயார் நிலையை ஆசியக் கோப்பை தொடர் பரிசோதிக்கும்: வாசிம் அக்ரம்

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசியக் கோப்பை நடைபெறுவதால் அதில் பங்கு பெறும் அணிகளின் பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பைக்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் விதமாக அமையும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 30) தொடங்க உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மோதுகின்றன. 

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசியக் கோப்பை நடைபெறுவதால் அதில் பங்கு பெறும் அணிகளின் பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பைக்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் விதமாக அமையும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்தியா, பாகிஸ்தான் அல்லது இலங்கை என எந்த அணியாக இருந்தாலும், அந்த அணிகளில் உள்ள பந்துவீச்சாளர்கள் 10 ஓவர்கள் வீசுகிறார்களாக இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம். தற்போது பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் 4 ஓவர்கள் வீசுவதற்கு பழகி விட்டார்கள். இந்த ஆண்டு ஆசியக் கோப்பை 20 ஓவர் போட்டியாக அல்லாமல் 50 ஓவர் போட்டியாக நடத்தப்படுவதை நான் வரவேற்கிறேன். உண்மையில் இது ஒரு சிறந்த யோசனை. ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியாக நடத்தப்படுவது உலகக் கோப்பை தொடருக்கு தயாராக உதவியாக இருக்கும். ஆசியக் கோப்பை ஒரு நீண்ட தொடர். ஒரு சில போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு செல்ல முடியாது. வீரர்களின் உடற்தகுதியை சோதிக்கும் தொடராக இது அமையும். ஆசியக் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும். இவர்கள்தான் வெல்வார்கள் என கணிக்க முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com