உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு: மிதாலி ராஜ்

உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்திய அணி 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றிருந்தது. உலகக் கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடத்தப்படுவதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் ரசிகை என்ற வகையில் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இது மிகப் பெரிய வாய்ப்பு. உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால், உலகக் கோப்பையை மீண்டும் ஒரு முறை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com