அடுத்த 15 ஆண்டுகளில் விளையாட்டுக்கு பெயர் பெற்ற நாடாக இந்தியா உருவெடுக்கும்: சுனில் கவாஸ்கர்

அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா விளையாட்டுக்கு பெயர் பெற்ற நாடாக உருவெடுக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
அடுத்த 15 ஆண்டுகளில் விளையாட்டுக்கு பெயர் பெற்ற நாடாக  இந்தியா உருவெடுக்கும்: சுனில் கவாஸ்கர்

அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா விளையாட்டுக்கு பெயர் பெற்ற நாடாக உருவெடுக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிவரை சென்ற 18 வயது நிரம்பிய பிரக்ஞானந்தா மற்றும் பாட்மின்டன் வீரர் பிரனோய் ஆகியோரின் வரலாற்று சாதனையை பாராட்டிப் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில்  தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா தன்வசமாக்கியுள்ளார். அதேபோல கடந்த வாரத்தில் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிப் போட்டி வரை முன்னேறி பிரக்ஞானந்தா அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். உலக சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான அக்‌ஷெல்சனை வீழ்த்தி இந்திய வீரர் பிரனோய் அசத்தியிருந்தார். இந்த மூன்று நிகழ்வுகளும் உலக அரங்கில் இந்தியாவை மேலும் தலைநிமிரச் செய்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா விளையாட்டுக்கு பெயர் பெற்ற நாடாக உருவெடுக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முன்பெல்லாம் ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே அதிகம் பேசப்படும். அந்த விளையாட்டுகள் மட்டுமே ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. அனைத்து விளையாட்டுகளிலும் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருவதால், அந்த விளையாட்டுகளும் அதிக கவனம் பெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது எனக்கு இன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போது இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இங்கிலாந்திலிருந்து நீரஜ் சோப்ரா ஈட்டி எறிவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதே உணர்களை நேற்றும் நான் உணர்ந்தேன்.

பாட்மின்டன் போட்டியில் பிரனோய் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்க பெயர் பெற்ற நாடுகளாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை நீங்கள் நினைத்தால், அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா விளையாட்டுக்கு பெயர் பெற்ற நாடாக உருவெடுக்கும் என உருவெடுக்கும் என நான் நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com