ரெட் கார்டு வாங்கிய முதல் கிரிக்கெட் வீரர்! 

சிபிஎல் போட்டியின்போது டிகேஆர் அணியின் பிரபல வீரருக்கு முதன்முறையாக ரெட் கார்டு வழங்கப்பட்டது.
படம்: ட்விட்டர் | சிபிஎல் டி20
படம்: ட்விட்டர் | சிபிஎல் டி20


கரீபியன் ப்ரீமியர் லீக்கின் 12வது போட்டியில் டிகேஆர் (டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்) அணிக்கு எஸ்கேஎன்பி (செயிண்ட் கிட்ஸ் அண்ட் பாட்ரியாட்ஸ்) அணி 20 ஓவர்களுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்து. இதில் அதிகபட்சமாக ரூதர்போர்ட் 62 ரன்கள் எடுத்தார். 

இதில் பௌலிங் செய்த டிகேஆர் (பொல்லார்ட்) அணியினர் 19வது ஓவர் வீசும்போது நடுவர் ரெட் கார்டினை அறிவித்தார். 80 நிமிஷங்களில் 19 ஓவர் முடித்திருக்க வேண்டும். ஆனால் பொல்லார்ட் அணியினர் 80 நிமிஷம் 45 நொடிகள் எடுத்துக் கொண்டனர். இதனால் மெதுவாக பந்து வீசிய காரணத்தினால் ரெட் கார்டு அறிவிக்கப்பட்டது.

இதில் கேப்டன் அணியின் ஒருவரை தேர்வு செய்யலாம். அவர் 20வது ஓவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். இதில் சுனில் நரைன் அப்படி வெளியேற்றப்பட்டார். மேலும், 30அடி வட்டத்தினை தாண்டி 2 பேர் மட்டுமே ஃபீல்டிங் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அடுத்து ஆடிய டிகேஆர் அணி 17.1 ஓவர்களுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 61 ரன்களும் டுக்கர் 36 ரன்களும் பொலார்ட் 37 ரன்களும் ரஸ்ல் 8 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 

சிபிஎல் வரலாற்றில் இதுதான் முதல்முறை. சர்வதேச அளவில் ரெட் கார்டு வாங்கும் முதல் கிரிக்கெட்டரும் சுனில் நரைன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளிலும் ரெட் கார்டு வரவேண்டுமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com