சிறந்த பந்துவீச்சாளர்கள் அடங்கிய இந்திய அணியை விராட் கோலியிடம் ஒப்படைத்தவர் தோனி : இஷாந்த் சர்மா

பந்துவீச்சாளர்களை சிறப்பாக உருவாக்கி ஒரு முழுமையான அணியை விராட் கோலியிடம், மகேந்திர சிங் தோனி ஒப்படைத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். 
சிறந்த பந்துவீச்சாளர்கள் அடங்கிய இந்திய அணியை விராட் கோலியிடம்  ஒப்படைத்தவர் தோனி : இஷாந்த் சர்மா

பந்துவீச்சாளர்களை சிறப்பாக உருவாக்கி ஒரு முழுமையான அணியை விராட் கோலியிடம், மகேந்திர சிங் தோனி ஒப்படைத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பையை இரண்டு முறை வென்று கொடுத்த பெருமைக்குரியவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக 2007 ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார். இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அதன்பின், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. 

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியில் அறிமுகமாகினர். 

இந்த நிலையில், பந்துவீச்சாளர்களை சிறப்பாக உருவாக்கி ஒரு முழுமையான அணியை விராட் கோலியிடம், மகேந்திர சிங் தோனி ஒப்படைத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். ஜியோ  சினிமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தபோது அணியின் பந்துவீச்சு முழுமையானதாக இருந்தது. நாங்கள் மகேந்திர சிங் தோனியின்   தலைமையின் கீழ் விளையாடியபோது வளர்ந்து வரும் நிலையில் இருந்தோம். அப்போது அணியில் நான்  இருந்தேன். அணியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் புதிதாக இணைந்தனர். புவனேஷ்வர் குமாரும் அணியில் புதிதாக இணைந்தார். மகேந்திர சிங் தோனி வீரர்களிடம் எந்த ஒரு போட்டியின் போதும் எதையும் அதிகம் கூறியதில்லை. தோனி பந்துவீச்சாளர்களின் திறனை அறிந்து அதற்கேற்ப அவர்களை உருவாக்கினார். அந்த பந்துவீச்சாளர்களை விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றபோது அவரிடம் ஒப்படைத்தார். காலப்போக்கில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் சிறந்த பந்துவீச்சாளர்களாக உருவானார்கள்.  இதனால், சிறந்த பந்துவீச்சாளர்கள் அடங்கிய ஒரு முழுமையடைந்த அணி விராட் கோலிக்கு கிடைத்தது.

பின்னர், விராட் கோலி பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது பண்புகளை பற்றி அவர்களிடம் பேசினார். ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் அவர் தனித்தனியாக அறிவுரை வழங்கி அவர்களது திறமைகளை மேலும் வெளிக்கொணரச் செய்தார். விராட் கோலி ஆக்ரோஷமானவர். அவர் இதை என்னிடம் கூறுவது வழக்கம். நீ போதுமான அளவுக்கு போட்டிகள் விளையாடி விட்டாய். விக்கெட்டுகளை எடுக்கும் விதத்தில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பார். 

அவர் முகமது ஷமியிடம் சென்று, உன்னால் விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் தொடர்ச்சியாக பந்து வீசுவதையே நான் விரும்புகிறேன். அப்படி செய்தால் உங்களால் மூன்று ஓவர்களை ரன் கொடுக்காமல் வீச முடியும் என்பார். பும்ராவிடம் சென்று, இது உன்னுடைய அறிமுகப் போட்டி, நீ என்ன நினைக்கிறாயோ அதன்படி பந்து வீசு. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சீராக பந்துவீசுவது என்பது மிகவும் முக்கியம் என்பார். அவர் எங்களை சராசரியாக யோசிக்காமல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சமயோஜிதமாக சிந்தித்து செயல்பட அவ்வாறு கூறினார் என்பதை 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் உணர்ந்தேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com