உலகக் கோப்பையில் விளையாடாதது வருத்தமளித்தது: இந்திய சுழற்பந்துவீச்சாளர்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில்  இடம்பெற முடியாதது நினைத்து வருத்தமாக இருந்ததாக இந்திய அணியின் அக்‌ஷர் படேல்  தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் விளையாடாதது வருத்தமளித்தது: இந்திய சுழற்பந்துவீச்சாளர்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில்  இடம்பெற முடியாதது நினைத்து வருத்தமாக இருந்ததாக இந்திய அணியின் அக்‌ஷர் படேல்  தெரிவித்துள்ளார்.

 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில்  இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அக்‌ஷர் படேல் இடம்பெற்றார். பின்னர், காயம் காரணமாக அவருக்குப் பதிலாக அணியின் இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில்,  உலகக் கோப்பைக்கான இந்திய அணியில்  இடம்பெற முடியாதது நினைத்து வருத்தமாக இருந்ததாக இந்திய அணியின் அக்‌ஷர் படேல்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட முடியாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்ற போதிலும், காயம் காரணமாக விளையாட முடியவில்லை. உலகக் கோப்பைத் தொடரின் ஆரம்ப நாள்களில் காயம் காரணமாக என்னால் இந்திய அணிக்காக விளையாட முடியாதது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.

அடுத்த 5-10  நாள்களில் நான் மீண்டும் எனது பயிற்சியை ஆரம்பித்தேன். காயம் காரணமாக 5-10 நாள்களுக்கு உங்களால் விளையாட முடியாது என்றால் நீங்கள் கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள். காயம் காரணமாக விளையாட முடியாதது குறித்து வருத்தப் பட்டேன். காயம் ஏற்படுவது யாருடைய கையிலும் இல்லை. விளையாட்டில் இதுபோன்ற விஷயங்கள் சகஜம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com