மிட்செல் ஜான்சனின் விமர்சனத்துக்கு வார்னர் கொடுத்த பதில்!

மிட்செல் ஜான்சனின் விமர்சனத்தைக் குறிப்பிடாமல், அனைவருக்கும் தங்களது கருத்துகளைக் கூற உரிமையிருக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
மிட்செல் ஜான்சனின் விமர்சனத்துக்கு வார்னர் கொடுத்த பதில்!

மிட்செல் ஜான்சனின் விமர்சனத்தைக் குறிப்பிடாமல், அனைவருக்கும் தங்களது கருத்துகளைக் கூற உரிமையிருக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் 14 முதல் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி தனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என டேவிட் வார்னர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன், டேவிட் வார்னரின் ஃபார்ம் குறித்து விமர்சித்தார். மேலும், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்தும் அவர் விமர்சித்தார். ஜான்சனின் இந்த விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா உள்பட பலரும் வார்னருக்கு ஆதரவாக பேசியிருந்தனர். 

இந்த நிலையில், மிட்செல் ஜான்சனின் விமர்சனத்தைக் குறிப்பிடாமல், அனைவருக்கும் தங்களது கருத்துகளைக் கூற உரிமையிருக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தலைப்புச் செய்தி இல்லாமல் இருந்தால் அது கோடைக்காலமாக (சம்மர்) இருக்காதல்லவா? அனைவருக்கும் அவரவர் கருத்துகளைக் கூறுவதற்கு உரிமையிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். எனது பெற்றோர் எனக்கு கடுமையாக உழைக்கவும், விமர்சனங்களை எதிர்கொள்ளவும் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். உலக அரங்கில்  இருக்கும்போது நம்மை நோக்கி என்ன நடக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. நிறைய ஊடகங்கள் நம்மை கவனிக்கும். நிறைய விமர்சனங்கள் வரும். ஆனால், பல நேர்மறையான விஷயங்களும் உள்ளன என்றார்.

ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 8,487 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com