உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பயன்படுத்தப்பட்ட விக்கெட் சராசரியானது: ஐசிசி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்தின் விக்கெட்டை ஐசிசி சராசரியான விக்கெட் எனக் குறிப்பிட்டுள்ளது. 
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பயன்படுத்தப்பட்ட விக்கெட் சராசரியானது: ஐசிசி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்தின் விக்கெட்டை ஐசிசி சராசரியான விக்கெட் எனக் குறிப்பிட்டுள்ளது. 

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியுடன்  நிறைவு பெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்தின் விக்கெட்டை ஐசிசி சராசரியான விக்கெட் எனக் குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பாக ஐசிசி தரப்பில், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லீக் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களான கொல்கத்தா, லக்னௌ, அகமதாபாத் மற்றும்  சென்னை மைதானங்களின் விக்கெட்டுகள் சராசரியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மும்பை வான்கடே மைதானத்தின் விக்கெட் சிறப்பானது எனவும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் விக்கெட் சராசரியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்தின் விக்கெட்டும் சராசரியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com