திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்த நியூசிலாந்து!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:23 pm

DIN

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், இன்று (டிசம்பர் 9) நியூசிலாந்து இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம்  டெஸ்ட் தொடரையும் சமன் செய்துள்ளது. 

3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் நியூசிலாந்தைக் காட்டிலும் 30 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த வங்கதேசம், இன்று இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  வங்கதேசம் தரப்பில் ஜாகிர் ஹாசன் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து 39.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. நியூசிலாந்து அணியில் கிளன் பிளிப்ஸ் அதிகபட்சமாக 40 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 35 ரன்களும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் மிராஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இல்ஸாம் ஒரு  விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

நியூசிலாந்து அணியின் கிளன் பிளிப்ஸ் ஆட்டநாயகனாகவும், வங்கதேசத்தின் தைஜுல் இஸ்லாம் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.