இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் ரத்து!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி  மழை காரணமாக ரத்தானது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் ரத்து!

டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தானது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி  டர்பனில் இன்று (டிசம்பர் 10) தொடங்கவிருந்த நிலையில்,  டர்பனில் மழை பெய்ததால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக, முதல் டி20 போட்டி ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி செவ்வாயன்று(டிச.12) கெபெர்ஹாவில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com