டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிரணி! 

மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிரணி வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளார்கள். 
டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிரணி! 
Published on
Updated on
1 min read

நவி மும்பையில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா,  முதல் இன்னிங்ஸ் 428 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக 

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, நிலையில்லாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மிடில் ஆா்டரில் வந்த நேட் ஸ்கீவா் 10 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக அமைந்தது. 136க்கு ஆல் அவுட்டானது. 

2வது இன்னிங்ஸில் இந்தியா 186/6க்கு டிக்ளேர் செய்ய இங்கிலாந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தீப்தி சர்மா 4, பூஜா வஸ்த்ரகா் 3, ராஜேஷ்வரி கெய்க்வாட்  2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். இதன் மூலம் 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளார்கள். 

டி20யில் 2-1 என இங்கிலாந்து வெற்றி பெற ஒரே டெஸ்ட் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை பெற்று கோப்பையை வென்றுள்ளது இந்திய மகளிரணி. 

முதல் இனிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 4 என மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய தீப்தி சர்மா ஆட்ட நாயகி விருது பெற்றார். 


இதுவரை மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற அதிகபட்ச வெற்றி: 

347 ரன்கள்: இந்தியா - இங்கிலாந்து, 2023
309 ரன்கள்: இலங்கை-  பாகிஸ்தான், 1998 
188 ரன்கள்: நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா, 1972 
186 ரன்கள்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, 1949
185 ரன்கள்: இங்கிலாந்து- நியூசிலாந்து, 1949

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com