இயக்குநர் பா. ரஞ்சித் படங்களில் இசையமைத்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மிகவும் பிரபலமடைந்தார். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அவரது அவர்களது கூட்டணி அத்தனையும் மெகா வெற்றி பெற்றது.
பின்னர் அறிவு- தீ இணைந்து பாடிய எஞ்சாமி பாடலில் யாருக்கு உரிமை என பிரச்னை எழுந்தது. இதனால் பா.ரஞ்சித்- சந்தோஷ் நாராயணனுக்கு மன கஷ்டம் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதனை தொடர்ந்து பா. ரஞ்சித் சந்தோஷ் நாராயணன் இல்லாமல் நட்சத்திரம் நகர்கிறது என்ற புதிய படத்தினை வெளியிட்டார்.
இதையும் படிக்க: முதலிடத்தில் சிஎஸ்கே: விரக்தியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்!
தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார். பிப்ரவரியில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: பிரவுதேவா - மடோனா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
இந்நிலையில் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “தீயாக இருக்கட்டும். நீயே ஒளி. வாழ்த்துகள் சந்தோஷ்” எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு சந்தோஷ் நாராயணன், “நன்றி மாமே. நம்ம படத்தின் பாடல்கள் அதிகமாக இருக்கும். அப்படியே தங்கலான் அப்டேட் கூறுங்கள்?” எனப் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஒரு வழியாக பிரச்னை முடிவுக்கு வந்ததாக மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஏனெனில் சார்பட்டா பரம்பரை 2 படம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கும் சந்தோஷ் இசையமைப்பாரா என ரசிகர்கள் வெகுவாக காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசியலில் இருந்து ஓய்வு என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு
தொழிலாளி கொலை வழக்கில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

காட்டெருமை தாக்கியதில் முதியவா் காயம்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



