கோப்புப் படம்
கோப்புப் படம்

டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷன் விலகல்: அவருக்கு பதில் யார் தெரியுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அணியிலிருந்து இஷான் கிஷன் தன்னை விடுவிக்கும்படி பிசிசிஐ-யிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. 

இதில் சூர்யகுமார் தலைமையில் டி20 தொடரில் 1-1 என சமநிலையில் முடிந்தது. தற்போது கே.எல்.ராகுல் தலைமையில் 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

அடுத்து ரோஹித் சர்மா தலைமையில் டெஸ்ட் போட்டி டிச.26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியிலிருந்து இஷான் கிஷன் தன்னை விடுவிக்கும்படி பிசிசிஐ-யிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. 

அதனால் இஷான் கிஷனுக்கு பதிலாக கே.எஸ். பரத் தேர்வாகியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடி கவனம் பெற்றவர் கே.எஸ். பரத். இவர் இந்தியாவுக்காக 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார். 

ஏற்கனவே முகமது ஷமி காயம் காரணமாக டெஸ் தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணைக் கேப்டன்), விராட் கோலி, ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (கீப்பர்), கே.எஸ். பரத் (கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷணா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com