ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும்  காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத் விலகியுள்ளார்.
படம் | எக்ஸ் (ட்விட்டர்)
படம் | எக்ஸ் (ட்விட்டர்)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும்  காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத் விலகியுள்ளார்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 360 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும்  காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத் விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத்துக்கு வலது விலா எலும்புப் பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதல் கட்டமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. பின்னர், அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு  அங்கு மருத்துவக் கண்காணிப்பில் இருக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது விலா எலும்பு பகுதியில் வலி இருப்பதாக குர்ரம் ஷாசத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com