முதன்முறையாக ஆஸி.யை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய மகளிரணி!

இந்திய மகளிரணி முதன்முறையாக ஆஸ்திரேலிய மகளிரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வென்றுள்ளது. 
முதன்முறையாக ஆஸி.யை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய மகளிரணி!

ஆஸ்திரேலிய மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. 

இதில் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஏற்கெனே இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் அபார வெற்றி கண்டது இந்திய அணி. அதன் தொடா்ச்சியாக பலம் வாய்ந்து ஆஸி. மகளிா் அணியை மும்பையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 77,.4 ஓவா்களில் 219/10 ரன்களுடன் ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் இந்தியத் தரப்பில் பூஜா வஸ்தராக்கா் 4, ஸ்னேஹ ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 126.3 ஓவா்களில் 406 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி.2வது இன்னிங்ஸில் 261 க்கு ஆல் அவுட்டானது. 

இந்தியாவை சேர்ந்த ஸ்னேஹ ராணா 4 விக்கெட்டுகளும்  2வது இன்னிங்ஸில் கய்க்வாட், ஹர்மன்ப்ரீத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

ஸ்மிருதி மந்தனா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 ரன்களையும் எடுத்தனா். 75/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிரணி. 

ஸ்னேஹ ராணா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 

இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிருக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரினை வென்று இந்திய மகளிரணி சாதனை படைத்துள்ளது. 

இதற்கு முன்பு நடைபெற்ற 10 போட்டிகளில் ஆஸி. 4 வெற்றியும் 6 டிராவும் நடந்துள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com