சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்: சாதனை படைத்த அணிகள்!

மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து இணைந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார்கள். 
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்: சாதனை படைத்த அணிகள்!

இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.  

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை படைக்காத சாதனையை இங்கிலாந்து- மேற்கிந்திய தீவுகள் அணி படைத்துள்ளது. 

இதுவரை நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் 97 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள்- இங்கிலாந்து இணைந்து 120 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்கள். 

அதிலும் மே.இ.தீவுகள் அணி 64 சிக்ஸர்களும், இங்கிலாந்து 56 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள். 

தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறும்போது இந்த சிக்ஸர்கள் குறித்து குறிப்பிட்டு பேசினார். இதனால்தான் தங்கள் அணி தோற்றதாக பேசியதும் குறிப்பிடத்தக்கது. 

மே.இ.தீவுகள் அணி, ஒருநாள் உலகக் கோப்பையில் தேர்வாகாவிட்டாலும் டி20 உலகக் கோப்பையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமென கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் நம்புகிறார்கள். 

இருதரப்பு டி20 தொடர்களில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் விவரம்: 

  1. மே.இ.தீவுகள்- இங்கிலாந்து - 120 (2023)
  2. பல்கேரியா- செர்பியா - 97 (2022) 
  3. மே.இ.தீவுகள்- இங்கிலாந்து- 96 (2022)
  4. நியூசிலாந்து - இங்கிலாந்து - 94 (2019) 
  5. பஹ்ரைன் - குவைத் - 91 (2022) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com