
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் 264 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இதையும் படிக்க: டீன் எல்கா் சதம்; தென்னாப்பிரிக்கா முன்னிலை
இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கமே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா 0 ரன்களிலும், டேவிட் வார்னர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷேன் 4 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 16 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை விக்கெட்டை இழக்காமல் ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தது. இந்த பார்ட்னர்ஷிப் 153 ரன்கள் சேர்த்தது. மிட்செல் மார்ஷ் 96 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிக்க: ஐஎஸ்பிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை வாங்கிய சூர்யா!
பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அஃப்ரிடி மற்றும் மிர் ஹம்சா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இறுதியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.